ஜீவா மணி மண்டபத்தில் கலெக்டர் மரியாதை
கன்னியாகுமரி மாவட்டத்தில், பொதுவுடைமை போராளி ஜிவாவின் 61-ம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
Update: 2024-01-19 01:59 GMT
குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம். அவரது 61 - வது நினைவு நாளையொட்டி, நாகர்கோவிலில் உள்ள ஜீவா மணி மண்டபத்தில், அன்னாரது திருவுருவ சிலைக்கு (18.01.2024) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்து மாலை அணிவித்தார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி மண்டல அலுவலர் ஜவகர் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.