மாட்டுப் பொங்கல்; குடும்பத்துடன் விவசாயிகள் கொண்டாட்டம்

சங்ககிரி கிராமப்புற பகுதிகளில் மாட்டுப் பொங்கல் விழாவை, விவசாயிகள் குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடினர்.

Update: 2024-01-16 07:01 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி சுற்றுவட்டார கிராமப்புற பகுதியில் விவசாயிகள் மாட்டுப் பொங்கல் விழா கோலாக்கல கொண்டாட்டம்.... தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா தமிழகம் முழுவதும் தொடர்ந்து மூன்றாவது நாளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நிலையில் இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, ஒடசக்கரை, தேவூர், காவேரிபட்டி கிராமப்புற பகுதிகளில் விவசாயிகளின் உற்ற தோழனான மாடு, ஆடுகளை தண்ணீரில் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி, புது வர்ண கயிறுகள் கட்டி அலங்கரித்து அதிகாலையிலே மண்பானையில் பச்சரிசி பொங்கல் வைத்தனர் .

அதனைத் தொடர்ந்து மாட்டு சாணத்தில் தெப்பக்குளம் கட்டி பிள்ளையார்பிடித்து வேப்பிலை, ஆவாரம்பூ, பூளைப் பூக்களை தோரணம் கட்டி மஞ்சள் கொத்து, அச்சு வெல்லம், கரும்பு , தேங்காய், பழம் ஆகியவர்களை வைத்து பூஜை செய்து படையலிட்டு வழிபட்டனர் . மேலும் மாடுகளை சுற்றி குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் குடும்பங்களாக ஒன்று கூடி பொங்கலோ, பொங்கல் என கோசமிட்டு கட்டி வைக்கப்பட்ட தோரணங்களின் நடுவில் மாட்டுக் கன்று குட்டிகளை மேளம் தட்டி உற்சாகப்படுத்தினர். மேலும் ஆடு ,மாடுகளுக்கு வாழைப்பழம் பொங்கல் ஊட்டி விட்டு விவசாயிகள் மாட்டுப் பொங்கல் விழா குடும்பங்களுடன் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News