பழைய கோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.15 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த பழைய கோட்டை மாட்டுத்தாவணியில் 15 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2024-03-11 10:12 GMT

விற்பனைக்கு வந்த மாடு

காங்கேயம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழைய கோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்துக்கும் உலகப் புகழ் பெற்ற காங்கேயம்  இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. 

இந்தச் சந்தையில் காங்கேயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும் வாங்குவதும் நடைபெறும். மேலும் இந்த காங்கேயம் இன கால்நடை விற்பனைச் சந்தையில் நேற்று காங்கேயம் இன  பசு மாடுகளை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் அதிக ஆர்வமுடன் நேரில் திரளாக கலந்து கொண்டனர். இதனால் இந்த சந்தையில் நேற்று விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மொத்தம் 65 காங்கேயம் இன பசு மாடுகள், காளைகள், கன்றுகளில் 41 மாடுகள், காளைகள், கன்றுகள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.

இதன்படி சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் இன கிடாரி கன்றுடன் மயிலை பசுமாடு ரூ.68 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தையில் காங்கேயம்  இன இளங்கன்றுகள் , ஆரம்ப விலையாக ரூ. 42,000 முதல் விற்பனை செய்யப்பட்டது.

இதன்படி நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ 15 லட்சத்திற்கு காங்கேயம் இன  காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News