தபால் துறை நிர்வாகமே தினசரி ஆதார் திருத்த பணிகளை மேற்கொள்ள சிபிஎம் கோரிக்கை

எலச்சிபாளையம் தபால் துறை நிர்வாகமே தினசரி ஆதார் திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் சிபிஎம் கோரிக்கை;

Update: 2024-03-09 13:02 GMT
எலச்சிபாளையம் யூனியன் ஆப்ஸ் எதிரில் செயல்பட்டு வரும் தபால் துறை உள்ளிட்ட அனைத்து தபால் நிலையங்களில் ஆதார் திருத்த பணிகள் செய்து தர வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் எலச்சிபாளையம் தபால் நிலையத்தில் ஆதார் திருத்த பணிகள் வாரத்தில் ஒருமுறை மட்டும் அதுவும் சில மணி நேரங்களில் நேரம் ஒதுக்கீடு செய்கின்றனர், இதனால் தபால் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் போதிய நேரம் கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் சில நேரங்களில் சர்வர் பிராப்ளம் ஏற்படும் போது மக்கள் காத்திருந்து வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில் ஏற்பட்டு வருகிறது தொடர்ந்து ஏதாவது ஒரு காரணத்தினால் ஆதார் பணிகள் மேற்கொள்ள முடியாததால் எலச்சிபாளையம் சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் இன்று காலை 6:00 மணிக்கு பொதுமக்கள் அலுவலகத்துக்கு வந்து 50க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர் பின்னர் அலுவலகத்திற்கு ஒன்பது மணிக்கு வந்த அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் டோக்கன் வழங்கிவிட்டு காத்திருந்தவர்களுக்கு வழங்காததால் பொதுமக்கள் மிகவும் ஏமாற்றத்துடன் சென்றனர் மேலும் ஏதாவது ஒரு காரணங்களால் வந்து திரும்பி செல்கிறோம் என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தபால் துறை அலுவலகம் முன்பு தினசரி ஆதார் திருத்திற்கு பணிகள் செய்து தர வேண்டும் என தட்டி ஒன்று எழுதி வைக்கப்பட்டுள்ளது இதனால் பெரும் பரபரப்பு எலச்சிபாளையம் பகுதியில் ஏற்பட்டது
Tags:    

Similar News