சேலம் சோனா கல்வி நிறுவனத்தில் கிரியேட்டிவ் டிஜிட்டல் ஆய்வகம் தொடக்கம்

சேலம் சோனா கல்வி நிறுவனத்தில் இந்தியாவின் அடோப் நிறுவனத்துடன் இணைந்து புதுமையான கிரியேட்டிவ் டிஜிட்டல் ஆய்வகத்தை தொடங்கியுள்ளது.

Update: 2024-06-14 04:41 GMT

கிரியேட்டிவ் டிஜிட்டல் 

சேலம் சோனா கல்வி நிறுவனத்தில் இந்தியாவின் அடோப் நிறுவனத்துடன் இணைந்து புதுமையான கிரியேட்டிவ் டிஜிட்டல் ஆய்வகத்தை தொடங்கியுள்ளது.

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் தொடங்கப்பட்ட இந்த டிஜிட்டல் ஆய்வகம் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் கற்றல் ஆகியவற்றின் மையமாக மாற தயாராகி வருகிறது.

இதுகுறித்து சோனா குழுமத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா கூறுகையில், எங்கள் கிரியேட்டிவ் டிஜிட்டல் ஆய்வகம் என்பது கல்வியில் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கும். அதிகரித்து வரும் டிஜிட்டல் உலகில் மாணவர்களை வெற்றி பெற தயார்படுத்துகிறது.

பயிற்சி பட்டறைகள், கூட்டுத்திட்டங்கள் மற்றும் தொழில் துறை சார்ந்த தரமான மென்பொருளுக்கான அணுகல் ஆகியவற்றின் மூலம் ஆய்வகம் அதன் பயனர்களிடையே புதுமை, படைப்பாற்றல் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவை வளர்ப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது, என்றார்.

முன்னதாக சோனா குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா கூறுகையில், வடிவமைப்பு எடிட்டிங் மற்றும் மேம்பாடு என எதுவாக இருந்தாலும் இந்த ஆய்வகம் எங்கள் சமூகத்தின் படைப்பாற்றலை வெளிக்கொணரவும், அவர்களின் யோசனைகளை முன் எப்போதும் இல்லாத வகையில் உயிர்ப்பிக்கவும் உதவும், என்றார்.

நிகழ்ச்சியில், வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் முதல்வர் கவிதா, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், சோனா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் காதர்நவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். .

Tags:    

Similar News