கடலூர்: ஒரே நாளில் 720 மனுக்கள் குவிந்தது

கடலூரில் ஒரே நாளில் 720 மனுக்கள் குவிந்தது

Update: 2024-01-23 13:56 GMT

மனுக்களை பெற்ற ஆட்சியர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 720 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்கள் மீது ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News