குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை மாவட்டம் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-02-28 03:52 GMT
கடலூர், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 4.82 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலா குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.