அரசு பேருந்தில் அறுந்த தகரம்: கட்டுக் கம்பி வைத்துக் கட்டிய ஓட்டுனர்

மதுரையில் அரசு பேருந்தில் அறுந்த தகரத்தை கட்டுக் கம்பி வைத்து ஓட்டுனர் கட்டினார்.

Update: 2024-04-15 13:35 GMT
கட்டு கம்பி வைத்து கட்டிய ஓட்டுநர்

மதுரை மாடக்குளத்தில் இருந்து மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் செல்லும் அரசு பேருந்துTN58N0932 என்கின்ற அரசு பேருந்து வழக்கம்போல சென்று கொண்டு வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் கடைசி முடிந்து திருப்பரங்குன்றம் பணிமனை செல்வதற்காக மாடக்குளத்தில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது மாடக்குளம் மெயின் ரோடு சர்ச் அருகே வரும் பொழுது திடீரென வலது புறம் பின் சக்கரம் அருகே சுமார் 3 அடி நீளமுள்ள தகரமானது கட்டுக் கம்பி ஏற்கனவே கட்டி வைத்துள்ளதாக தெரிய வருகிறது இந்த நிலையில் அது அருந்து விழுகவே தொங்கிக் கொண்டே வந்துள்ளது.

இதை கவனித்த ஓட்டுனரும் நடத்துனரும் சாலையில் வாகனத்தை ஓரமாக நிறுத்தி வாகனத்திலேயே கட்டு கம்பி வைத்திருந்தார்களா என தெரியவில்லை ஒரு கட்டுக் கம்பி சுமார் அரை கிலோ இருக்கும் அதை வைத்து தொங்கிக்கொண்டு இருந்த சுமார் 3 அடி நீளம் உள்ள தகரத்தை கட்டிக்கொண்டு இருந்தனர்.

இதை பார்த்த அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் இதை வீடியோவாக எடுத்துள்ளார் ஓட்டுநரும் நடத்துனரும் தயவு செய்து புகைப்படம் எடுக்க வேண்டாம் எனவும் என தெரிவித்தார் ஏன் நீங்கள் நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லையா என கேட்டதற்கு இல்லை மூன்று நாட்களுக்கு முன்பாகவே நான் தெரிவித்து விட்டேன் எனவும்

மூன்று நாள் விடுமுறையில் இருந்து இன்று தான் வேலைக்கு வந்தேன் எனவும் தெரிவித்தார் பொறுப்பற்ற முறையில் அரசு போக்குவரத்து நிர்வாகம் செயல்படுவது மிகுந்த வேதனைக்குரியதாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் இந்த தகரமானது சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்தால் பின்னால் வரும் இருசக்கர வாகனமோ இல்லது ஏதேனும் வாகனத்தில் மீது மோதி விபத்து ஏற்பட்டு அதில் உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்,

வெறும் தகர டப்பாவாக பேருந்துகளை இயக்கும் மாநகர அரசு போக்குவரத்து போக்குவரத்து கழகம் பயணிகள் மீது அக்கறை கொண்டு பேருந்தானது பணிமனையில் இருந்து வெளியே செல்லும் பொழுது பிரேக் முதல் அனைத்து பாகங்களும் சரியாக உள்ளதா என பரிசோதித்து அனுப்புகிறார்களா? என கேள்வி எழுந்துள்ளது ஓ இதுதான் திராவிட மாடல். அரசு பேருந்து என தலையில் அடித்துக் கொண்டு பொதுமக்கள் சென்றனர்…

Tags:    

Similar News