சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி

நாகை மாவட்ட காவல்துறையின் சார்பாக சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

Update: 2024-02-29 14:21 GMT

விழிப்புணர்வு பேரணி

இணைய வழி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இணையவழி குற்றங்கள் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. பெரும்பாலும் இவ்விதமான குற்றங்கள் பொது மக்களுக்கு தேவைகளுக்கு ஏற்ப பொருட்களை அழிப்பதாகவும், பரிசுப் பொருட்கள் தருவதாகவும், குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும் இது போன்ற எண்ணில் அடங்கா பொய்யான வாக்குறுதிகளை வழங்கியும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இம்மாதிரியான இணைய வழி குற்றங்கள் மிகப்பெரும் நகரங்களில் ஆரம்பத்து அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் கூட தற்போது நடைபெற்று வருகிறது.

இணைய வழி நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கும் குற்றங்களிலிருந்து விரைவில் தீர்வு காணும் வகையில் சைபர் கிரைம் குற்றங்களை பதிவு செய்து உரிய தீர்வு காணும் வகையில் www.cybercrime.gov.in என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது.

மேலும் இலவச சைபர் கிரைம் குற்றப்பதிவு அலைபேசி எண்ணாக 1930 எண் செயல்பட்டு வருகிறது.இதனை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையிலும் இணையவழி(cyber crime) குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும் நாகை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மற்றும் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் இணைந்து சைபர் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

பேரணியை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் கொடியசைத்து துவங்கி வைத்தார்கள். பின்பு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தக்க அறிவுரை வழங்கியதுடன் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தினார்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் 200 க்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடன் மாவட்ட காவல் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியானது, மணிக்கூண்டு வழியே சென்று பின்பு நாகை புதிய பேருந்து நிலையம் அருகே அவுரி திடலில் நிறைவடைந்தது.

இதில் சர் ஐசக் நியூட்டன் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த பேரணியில் காவல்துறையின், மற்றும் பொது மக்கள் பங்கேற்றினார்கள்.

Tags:    

Similar News