சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
Update: 2024-03-02 11:48 GMT
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இணைய வழி குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பது குறித்த . சைபர் கிரைம் குற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் துவங்கிய பேரணியை பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். பாலக்கரையில் துவங்கிய பேரணி கே.கே.நகர், பங்களா ஸ்டாப் பகுதி வழியாக துறைமங்கலம் பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில் சென்ற மாணவர்கள், இணைய வழி குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பது குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். இதில் காவல்துறையினர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.