பெரியகுளம் அருகே சூறாவளி காற்றால் பயிர்கள் சேதம்

பெரியகுளம் அருகே சூறாவளி காற்றால் பயிர்கள் சேதம் அடைந்தது.

Update: 2024-05-06 12:12 GMT

சேதமடைந்த மரங்கள்

 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரம் பகுதியில் நேற்று மாலை பலத்த சூராவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்பொழுது வீசிய பலத்த சூராவளி காற்றால் குள்ளப்புரம், சங்கரமூர்த்திபட்டி, ஒத்த வீடு உள்ளிட்ட பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்,

இரண்டு ஏக்கரில் நடவு செய்யப்பட்டு இருந்த பப்பாளி மரங்கள், மேலும் 3 ஏக்கரில் முருங்கை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது. இந்நிலையில் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் கூறுகையில் ... சூறாவளி காற்றால் இரண்டு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பிஞ்சு வாழை தார்கள் ஒடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் பப்பாளி மரங்கள் காய் பலம் பிஞ்சு உள்ளிட்டவைகளும் ஒடிந்து சேதம் அடைந்ததோடு முருங்கை மரங்கள், தென்னை மரங்கள் காய்களுடன் ஒடிந்து சேதம் ஏற்பட்டது. மேலும் சூறாவளி காற்றால் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை, பப்பாளி, முருங்கை, தென்னை உள்ளிட்ட விவசாய விலை பொருட்கள் ஒடிந்து சேதம் ஏற்பட்டுள்ளதால்,

தமிழக அரசு ஊழிய கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News