15 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: கோட்டாட்சியர் ஆய்வு
மிக்ஜாம் புயல் மழையால் 15 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தது கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் உட்பட்ட வசூர், பெரியகரம், அத்திமுர், உட் பட கிராமங்களில் விவசாயிகள் நடப்பு பருவத்தில் சுமார் 15 ஏக்கருக்கு மேல் சன்னா ரகம், குண்டு, ஏடிடி உட்பட பயிர்கள் பயிரிட்டுள்ளனர். இந்நி லையில் வடகிழக்கு பருவ மழை காராணமாக கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது.
இதன் காரணமாக அறு வடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழையில் நிலத்தில் மடங்கி மூழ்கின. தொடர்ந்து நீரில் மூழ்கி இருந்ததால் நெல் மணிகள் முளைக்க தொடங்கி சேதமடைந்து உள்ளன. இதனை ஆரணி கோட்டாட்சியர் ம.தனலட்சுமி ஆய்வு செய்தார். மேலும் போளூர் தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் கள் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என கூறினர். இதில் தாசில்தார் ம.வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் அ.மணி கண்டன், சார் ஆய்வாளர் ச.சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.