சீர்காழி அருகே பழமையான ஆற்றுப்பாலம் சேதம் : போக்குவரத்து நிறுத்தம்

சீர்காழி அருகே கீழச்சாலை திருவாலியை இணைக்கும் பழமையான ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-12-31 09:45 GMT

இடிந்து விழுந்த பாலம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாலி கிராமத்திலிருந்து கீழச்சாலை கிராமத்திற்கு செல்லும் பாதையில் மிகவும் பழமையான மண்ணி ஆற்று பாலம் உள்ளது, இந்த பாலத்தின் வழியே இன்று கனரக வாகனம் செல்லும் போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழந்தது.

இதனால் அண்ணன் பெருமாள் கோவில், மேலச்சாலை, கீழச்சாலை, அஞ்சாமலை, நாங்கூர் பகுதிகளிலிருந்து திருவாலி பகுதிக்கு செல்வதற்கான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாலை நேரத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் சுற்றியுள்ள 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 10 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வழிவகை செய்ய வேண்டும், மேலும் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News