ஜல்லி கிரஷரால் பணப்பயிர்கள் சேதம் - விவசாயி புகார்

ஓசூர் அருகே சாலை பணிக்காக மேற்கொள்ளப்படும் ஜல்லி கிரஷர் தயாரிப்பு பணிகளால் விளைவித்துள்ள பண பயிர்கள் சேதமடைவதாக விவசாயி புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-26 07:44 GMT
விவசாயி நவீன் 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வட்டம் முத்தாலி பஞ்சாயத்து அத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நவீன் குமார் இவர் தன்னுடைய பூர்வீக சொந்த நிலமான சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு அனுமதியுடன் வனத்துறை மூலம் சிகப்பு சந்தன மரம், மகாகனி மற்றும் சந்தன மரம் மா தென்னை வாழை என பல்வேறு மரங்களை நடவு செய்துள்ளார். இப்போது நன்கு வளர்ந்து இருந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அப்பகுதியில் உள்ள STRR சேட்லைட் டவுன் ரிங் ரோடு சாலைக்கு கிராமத்தை ஒட்டியே ஜல்லி கிரசர் எம்சாண்ட் தயாரிக்கும் மெஷின் மற்றும் கான்கிரீட் கலவை போன்ற மெஷின்களை ஒரே இடத்தில் வைத்து சாலைக்கான பணிகளை செய்து வருகின்றது .

தனியார் நிறுவனம் அரசு அனுமதி பெற்று நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் ஜல்லி கிரஷர்கள் கிராமப்புறத்தில் இருந்து 500 மீட்டருக்கு தொலைவில் இருக்க வேண்டும் விவசாயிகளை பாதிக்காதவாறு பணிகள் நடைபெற வேண்டும் என அரசு விதிமுறை இருந்தும் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுள்ள அதிகாரிகள் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரதாப் மற்றும் பிரவீன் அவர்கள் நிலங்களில் S.T.R.R. (Satellite Town Ring Road) ஒப்பந்ததாரர்கள் கிரஷர் அமைப்பதற்கு மேற்படி நில உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் போட்டு சுமார் 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கல் உடைக்கும் இயந்திரங்களைக் கொண்டு கல் உடைத்து கிரசர்களில் எம் சான்ட் தயாரிக்கின்றனர்.

அதேபோல் அங்கேயே சிமெண்ட் கலவை மூலம் காங்கிரட்டும் தயார் செய்து சாலை அமைப்பதற்காக நூற்றுக்கணக்கான வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் இதனால் கிராமப்புற சாலைகள் ஒரு பக்கம் சேதமடைந்தாலும் விவசாயி பயர்கள் பெரும் அளவில் பதிக்கப்பட்டுள்ளது, இதனால் பயிர்கள் சேதம் அடைவது மட்டுமல்லாமல் ஆடு, மாடுகளுக்கும் உணவு அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பாக கிரசர் அருகே உள்ள நவீன்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிட்டுள்ள மகாகனி சந்தன மரம் சிவப்பு சந்தன மரம் வாழை தென்னை மாமரம் போன்ற மரங்களில் வெண் போர்வை போர்த்தியது போல் சிமெண்ட் துகல்கள் இழை மீது படர்ந்துள்ளது, மாசு காரணமாக மரச்செடிகள் இலைகள் கருகி மரம் வளர முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டுள்ள விளைவு உயர்ந்த மரக்கன்றுகளை காப்பாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் தங்கள் குடும்பத்திற்கு வாழ்வாதாரமே இந்த மரங்களை நம்பி தான் உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ள விவசாயி உரிய இழப்பீடு வழங்கவும் அல்லது ஜல்லி கிரசர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் , மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முதலமைச்சர் நேரடி பார்வை அலுவலகத்திற்கும் பலமுறை கடிதம் மூலம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News