மேல்நிலை தொட்டி அகற்றும் போது வீட்டின் படிக்கட்டு முழுதும் சேதம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டடம் இடிக்கும் போது அருகே இருந்த வீட்டின் மாடி படிக்கட்டுகள் சேதம் அடைந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, தம்மனுார் அம்பேத்கர் நகர் கிராமத்தில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பயன்பாடு இன்றி இருந்தது. இதை அகற்ற வேண்டும் என, ஒரு சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதை ஏற்று, ஊராட்சி நிர்வாகமும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கும் பணியை, நேற்று துவங்கியது. அடி பாகம் பில்லர் உடைக்கும் போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் இருந்த, தசரதன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில், மாடி படிக்கட்டிற்கு செல்லும் ஒரு பகுதி முழுதும் இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து, வீட்டின் உரிமையாளர் தசரதன் கூறியதாவது: நான் கொத்தனாராக வேலை செய்து வருகிறேன். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டடம் இடிக்கும் போது, வீட்டு கட்டடம் சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.