உயர்மின்அழுத்தத்தால் பொருட்கள் சேதம் பொதுமக்கள் மறியல் போராட்டம்
மின் மாற்றியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்;
Update: 2023-12-06 03:13 GMT
உயர்மின்அழுத்தத்தால் பொருட்கள் சேதம் பொதுமக்கள் மறியல் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா , சங்கரன்பந்தல் கிராமத்தில், உயர் அழுத்த மின்சாரம் ஏற்பட்டது, இதனால், சங்கரன்பந்தல் கிராமத்தில் உள்ள, 5 தெருகளில் , 80க்கும் மேற்பட்ட வீடுகளில், இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி உள்ளிட்ட, பல்வேறு மின்சாதன பொருட்கள், சேதமடைந்தன. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் பொறையார் மங்கைநல்லூர் சாலையில், சங்கரன்பந்தல் கடைவீதியில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தநேரத்தில் அங்குவந்த, பூம்பகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் ,பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக மின்மாற்றியை மாற்ற நடவடிக்கை எடுத்தார். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை ,கைவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.