மின்கசிவால் கரும்பு பயிர்கள் சேதம்
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் நேற்று மின்சார ஒயர் துண்டாகி, கீழே விழுந்ததில் கரும்பு பயிர்களில் தீ விபத்து உண்டானது.;
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் நேற்று மின்சார ஒயர் துண்டாகி, கீழே விழுந்ததில் கரும்பு பயிர்களில் தீ விபத்து உண்டானது.
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ஆறுமுகம்,65; இவருக்கு குரூர் ஏரி கோடி பகுதியில் விளைநிலம் உள்ளது. ஆறுமுகம் தனது விளைநிலத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டிருந்தார். நேற்று மதியம் 1.30 மணியளவில் அப்பகுதியில் இருந்த மின்சார ஒயர் துண்டாகி, கரும்பு பயிர் மீது விழுந்துள்ளது. இதனால் தீப்பொறி ஏற்பட்டு கரும்பு பயிர் முழுவதும் மளமளவென தீ பரவியது.
இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால், தீயணைப்பு வாகனம் விளைநிலத்திற்கு செல்லும் வகையில் வழித்தடம் இல்லை. இதனால் தீயணைப்பு வீரர்கள் ஈரசாக்கு மற்றும் அருகில் இருந்த செடிகள், கொடிகளை பயன்படுத்தி தீயிணை அணைத்தனர். இதில், இரண்டரை ஏக்கருக்கும் மேலாக கரும்பு பயிர் முற்றிலும் கருகி சேதமடைந்தது.