செம்பரம்பாக்கம் ஏரியின் இணைப்புக் கால்வாய் சேதம்

செம்பரம்பாக்கம் ஏரியின் இணைப்புக் கால்வாய் சேதம் அடைந்துள்ளது.

Update: 2023-12-20 12:33 GMT

 செம்பரம்பாக்கம் ஏரியின் இணைப்புக் கால்வாய் சேதம் அடைந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாய் சேதமடைந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. இந்த ஏரி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் 3,600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரியை இணைக்கும் கிருஷ்ணா கால்வாய் உள்ளது. ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் இந்த கால்வாய் வழியே செம்பரம்பாக்கம் ஏரியை வந்தடையும்.

மேலும், மழைக்காலத்தில் 100க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரி நீர், இந்த கால்வாய் வழியே செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும். இதனால், செம்பரம்பாக்கம் ஏரியின் முக்கிய நீர்வரத்து கால்வாயாக கிருஷ்ணா கால்வாய் உள்ளது. இந்நிலையில், 'மிக்ஜாம்' புயல் மழையின் போது பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரால் இந்த கால்வாய் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதுார் அருகே, மேவளூர்குப்பம், தண்டலம் பகுதியில் இந்த கால்வாயின் கரைகள் சரிந்து விழுந்துள்ளன. இந்த கால்வாயை பொதுப்பணி துறையினர் சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News