கபிஸ்தலம் அருகே சேதமடைந்த பாசன வாய்க்கால்: விவசாயிகள் கோரிக்கை

கபிஸ்தலம் அருகே சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு சுவரை சீர் செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-05-23 17:19 GMT

சேதமடைந்த மதகு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்க்கு இளங்கர்குடி பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அனுப்பி உள்ள கோரிக்கை முடிவில் கூறி இருப்பதாவது,, கபிஸ்தலம் அருகே இளங்கார்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி அரசராற்று கரையோரத்தில்,

இந்த பகுதியில் உள்ள சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, பாசன வாய்க்கால் மூலம் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு செல்வதற்கு பாசன வாய்க்கால் மதகு மற்றும் தரைப்பாலம் தடுப்பு சுவருடன் சாலையின் குறுக்கே கட்டப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக பாசன வாய்க்கால் மதகு மற்றும் தரைப்பால தடுப்பு சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் பாசன வாய்க்கால் மதகு மண் சரிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் ஆபத்தான வளைவில் சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு உள்ளதால் சாலை எதிர்பாராதவிதமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதோடு மண் சரிவு ஏற்பட்டு விபரீதம் ஏற்படுமோ? என வாகன ஓட்டிகள் அச்சத்துடன் உள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதம சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு மற்றும் தரைப்பால தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் அதனை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய மதகு மற்றும் தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என்று வாகன ஓட்டிகள், விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம், இவ்வாறு அவர்கள் அனுப்பு உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்கள்,,,,

Tags:    

Similar News