சேதமடைந்த கொசஸ்தலை தரைப்பாலம் - ஆபத்தான பயணம்

Update: 2023-12-21 03:38 GMT

சேதமடைந்த தரைப்பாலம் 

பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், சொரக்காய்பேட்டை வழியாக பாய்கிறது. இதில், சொரக்காய்பேட்டை அருகே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த வழியாக பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், ஆந்திர மாநிலம், நகரி, புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையில், இந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால், இந்த வழியாக ஆற்றை கடந்த இருசக்கர வாகனங்கள் ஆபத்தான முறையில் பயணித்து வந்தன. இதையடுத்து, தற்காலிகமாக மண் கொட்டி சீரமைக்கப்பட்டது. தற்போது பாலத்தின் இதர பகுதியும் மண்ணரிப்பால் விரிசல் விட்டு அபாய நிலையில் உள்ளது. ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் பாய்ந்து வருவதால், பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழ நேரிடலாம். பாலத்தின் வழியாக வாகனங்களுக்கு தடை விதித்து மண் கொட்டப்பட்டுள்ளது. அதையும் மீறி, கனரக வாகனங்கள் பாலத்தின் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. குவாரியில் இருந்து ஜல்லி கற்கள் இந்த வழியாக ஏற்றி வரப்படுகின்றன. பெரும் விபரீதம் ஏதும் ஏற்படும் முன், பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதித்து, பாலத்தை சீரமைக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News