கோனேரிப்பட்டி கோவில்களில் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம்

சிலுவம்பாளையம் அருகே உள்ள கோனேரிப்பட்டி ஓம் காளி அம்மன் மற்றும் பெரிய மாரியம்மன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-02-28 16:24 GMT

சிலுவம்பாளையம் அருகே உள்ள கோனேரிப்பட்டி ஓம் காளி அம்மன் மற்றும் பெரிய மாரியம்மன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் செய்தார்.

 சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள இல்லத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். இதைத்தொடர்ந்து  கோனேரிப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ.ஓம் காளி அம்மன் கோயிலுக்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாகமான முறையில் கிராம மக்கள்  வரவேற்பு அளித்தனர்.

பின்னர் மனம் உருகி எடப்பாடி பழனிச்சாமி வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து கோனேரிப்பட்டி சந்தை அருகே உள்ள பெரிய மாரியம்மன் திருக்கோவில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சால்வை அணிவித்து கோவிலில், பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News