தந்தையின் சாவில் சந்தேகம் என மகள் போலீசில் புகார்

எடப்பாடி அருகே தந்தையின் சாவின் சந்தேகம் இருப்பதாக மகள் போலீசில் புகார் கூறியதால், உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.;

Update: 2024-03-31 05:22 GMT

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே பக்க நாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் 64விவசாயியான இவரது மனைவி மணி இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன்கள் தனபால் கந்தசாமி மகள்கள் ஜெயா சித்ரா அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனபால் இருந்து விட்டா.ர் லாரி டிரைவரான கந்தசாமி அடிக்கடி குடித்துவிட்டு தனது தந்தையிடம் சொத்து கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

தொடர்ந்து அவரது பெயரில் வங்கியில் உள்ள 2 லட்சம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதற்கிடையே சாலை விபத்தில் சிக்கிய செல்லப்பன் வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி செல்லப்பன் இறந்துவிட்டதாக கூறி கந்தசாமி தனது சகோதரிகள் ஜெயா சித்ரா ஆகியோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளார். தொடர்ந்து ஊருக்கு அருகே உள்ள செல்லப்பனுக்கு சொந்தமான தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

இந்நிலையில் தனது தந்தை சாவில் சந்தேகம் உள்ளதாக பூலாம்பட்டி போலீசில் சித்ரா புகார் தெரிவித்துள்ளார். இதன் பெயரில் இன்ஸ்பெக்டர் சுமத்ரா வழக்கு பதிவு செய்து, வட்டாட்சியர் வைத்தியலிங்கம் முன்னிலையில் நேற்று செல்லப்பன் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது, பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்த பிரேத பரிசோதனைக்கு பின்பு நேற்று மாலை உறவினர்களிடம் செல்லப்பனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. தோண்டி எடுக்கப்பட்ட இடத்தில் மீண்டும் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News