மகள் மாயம் - தந்தை புகார்

விருதுநகர் அருகே சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற மகளை காணவில்லை என தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.;

Update: 2024-01-21 03:51 GMT

காவல் நிலையம் 

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் காயத்ரி (20மகள் மாயம் - தந்தை புகார்). காயத்ரி ஈரோடு மாவட்டம் தாமரைபாளையத்தில் உள்ள தனியார் மெடிக்கல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருவதாக கூறப்படுகிறது. பொங்கல் மற்றும் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 19ஆம் தேதி காயத்ரிக்கு காய்ச்சல் அடிப்பதாக கூறி விட்டு வீட்டின் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் அவர் வீட்டிற்குவராத அடுத்து அவருடைய உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்த பொழுது காயத்ரி அங்கு வரவில்லை என தெரிந்துள்ளது. அதை தொடர்ந்து மகளை பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடியும் மகள் கிடைக்காததை அடுத்து மகளை கண்டுபிடித்து தர கோரி தந்தை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Tags:    

Similar News