சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் சிறுதானிய உணவுத் திருவிழா

சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-12-19 11:58 GMT

மாவட்ட ஆட்சியர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- உடலுக்கு நன்மை பயக்குகின்ற சிறுதானியங்களை உணவாக பயன்படுத்த 2023- ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் (21-ந் தேதி) வியாழக்கிழமை அன்று சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாயக் கூடத்தில் காலை 10 மணி முதல் மாலை வரை சிறுதானிய உணவுத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

இந்த சிறுதானிய உணவுத் திருவிழாவில் பொதுமக்களாகிய நுகர்வோர்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து வகையான சிறுதானிய வகைகள் காட்சிப் படுத்தப்படவுள்ளன. மேலும் சிறுதானியங்களால் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், காட்சிக்கு வைக்கவும் மற்றும் விநியோகம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்விழாவில் சிறு தானியங்கள் குறித்த கண்காட்சி அரங்குகள், கருத்தரங்கங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News