சேப்பாக்கம் பகுதியில் தயாநிதிமாறன் வாக்கு சேகரிப்பு !

Update: 2024-03-28 07:02 GMT

 தயாநிதிமாறன் 

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் பகுதியில் உள்ள மிர் புக்‌ஷி அலி தெரு, மாணிக்கம் மேஸ்திரி சாலை, ஜே.ஜே.கான் சாலை ஆகிய தெருக்களில், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பணிகள் நிலைக்குழுத் தலைவருமான நே.சிற்றரசு மற்றும் பகுதிக் கழகச் செயலாளரும் மண்டலக் குழுத் தலைவருமான எஸ்.மதன்மோகன் சென்று வாக்கு சேகரித்தார்.

உடன் மாவட்டக் கழகப் பொருளாளர் ஜெ.எஸ்.அகஸ்டின் பாபு, மாவட்டக் கழக துணைச் செயலாளர் வி.எஸ்.கலை, கழக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான சி.ஹெச்.சேகர், கழக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளரும் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான பத்மப்பிரியா, ஆயிரம் விளக்கு கிழக்குப் பகுதி கழகச் செயலாளர் மா.பா.அன்புதுரை, கழக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் நிவேதா ஜெஸிகா, கழக வர்த்தகர் அணி துணைச் செயலாளர் வி.பி.மணி, மாமன்ற உறுப்பினர் ஈஸ்வரி வெங்கடேசன், வட்டக் கழகச் செயலாளர் ஜி.வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.பிரகாஷ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அண்ணாநகர் அசோக் குமார், கூட்டணிக் கட்சித் தோழர்கள் மற்றும் கழக முன்னணியினர்.

Tags:    

Similar News