செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சடலம்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-31 06:42 GMT
ரயில் நிலையத்தில் சடலம்
செங்கல்பட்டு ரயில் நிலையம் முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் பகுதி அருகே படுத்திருந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒருவர் இன்று காலை உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே மற்றும் செங்கல்பட்டு நகர காவல்துறைக்கு தகவல் அளித்தும் 5 மணிநேரமாக சடலம் மீட்கப்படாமல் அந்த இடத்திலேயே இருந்துள்ளது. ரயில்வே மற்றும் நகர காவல்துறைக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்னை காரணமாக சடலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையே, முன்பதிவு மையத்தில் ஒருவர் உயிரிழந்ததை அறியாத பயணிகள் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை பெறும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.