கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் வாலிபர் சடலம்
Update: 2023-12-19 07:42 GMT
காவல் நிலையம்
கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டேண்டில் உள்ள கழிப்பறை அருகே கடந்த 16ம் தேதி பெயர், விலாசம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். விசாரணையில், இறந்து கிடந்த நபர் பள்ளிப்பட்டுகிராமத்தை சேர்ந்த சின்னகவுண்டர்,30; என்பதும், உடல்நலக்குறைவால் உயிரிழந்ததும், பெற்றோர்கள், உறவினர்கள்யாரும் இல்லாததும் தெரிந்தது.வி.ஏ.ஓ. முத்துராஜ் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.