மேல்மலையனூர் அக்னி குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
மேல்மனையனூரில் பக்தர்கள் நீராடிய குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது.;
செத்து மிதந்த மீன்கள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரின் ஈசான்ய மூலையில் அக்னி குளம் உள்ளது. 30 ஆண்டுக ளுக்கு முன்பு வரை இந்த குளம் மக்களின் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டது. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா ஆரம்பித்ததில் இருந்து பக்தர்கள் புனித நீராடும் குளமாக அக்னி குளம் மாறியது.
அவ்வாறு குளிக்கும் பக்தர்கள், தங்களது ஆடைகளை கழற்றி குளத்திலேயே விட்டுச் செல்கிறார்கள். அதில் இறங்கி குளிக்கும் பக்தர்களின் கால்களில் அந்த துணிகள் மாட்டிக்கொண்டு உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இந்த குளத்தில் குளிக்கும் பக்தர்கள், தங்களது ஆடைகளை போடக்கூடாது. பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை வீசக்கூடாது என்று ஊராட்சி நிர்வாகம் எவ்வளவோ எச்சரிக்கை செய்தும், அதை பக்தர்கள் கடைபிடிப்பதில்லை.
இதனிடையே கடந்த 7-ந்தேதி நடை பெற்ற அமாவாசை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த அக்னி குளத்தில் புனித நீராடிய பக்தர்கள் துணிகளை மட்டும் விட்டுச் செல்லவில்லை. மாறாக எலுமிச்சை பழத்தை வீசியும், அக்னி குளத்தில் கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். செத்து மிதந்த மீன்கள் இதனால் அதில் இருந்து வெளியேறிய அமிலங்கள், தண்ணீர் முழுவதும் பரவிய தால் குளத்தில் இருந்த மீன் கள் அனைத்தும் செத்து மிதந்தன. மேலும் அந்த குளம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
இதையும் பொருட்படுத்தாமல் ஊராட்சி நிர்வாகம், துப்புரவு பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகிறது. இந்த குளத்தை மீன் வளர்க்க குத்தகை எடுத்தவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாக மும், ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.