பிறந்த 3 நாட்களான பெண் சிசு உயிரிழப்பு !

உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் பிறந்து 3 நாட்களான பெண் சிசு உயிரிழப்பு.போலிசார் விசாரணை.

Update: 2024-03-16 09:30 GMT

பெண் சிசு உயிரிழப்பு

உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் பிறந்து 3 நாட்களான பெண் சிசு உயிரிழப்பு.போலிசார் விசாரணை. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடச்சிபட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(29).இராணுவத் துறையில் சென்னையில் பணியாற்றி வருகின்றார்.இவருடைய மனைவி வஞ்சிமலர்(27). இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் வஞ்சிமலர் மீண்டும் கர்ப்பமாகி பிரசவத்திற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களுக்கு முன் மீண்டும் பெண் குழந்தை பெற்றெடுத்து மருத்துவமணையில் பிரசவவார்டில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.குழந்தை ஆரோகியமாக இருந்த நிலையில் இன்று காலை பெண் சிசு பேச்சு மூச்சில்லாமல் அசைவற்று கிடப்பதைக் கண்ட வஞ்சி மலர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கனவே இறந்திருப்பது தெரிய வந்தது.தகவலறிந்த உசிலம்பட்டி நகர் போலிசார் பெண் சிசுவை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பிறந்து 3 நாளில் பெண் சிசு உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News