சிவகாசியில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு - போலீஸ் விசாரணை

சிவகாசியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழந்ததையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-06 04:50 GMT

காவல்துறை விசாரணை

விருதுநகர் மாவட்டம் அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிதுல் இஸ்லாம் (19). இவர் சிவகாசி தொழில்பேட்டையில் தனியார் சோப்பு கம்பெனியில் கடந்த ஒன்றரை மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.சம்பவத்தன்று தான்தங்கி இருந்த அறையில் இருந்து படிக்கட்டில் தவறி கீழே விழுந்துள்ளார். சிகிச்சைக்காக எங்கும் செல்லாமல் அறையிலேயே இருந்துள்ளார். இரவு பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தை கேள்விப்பட்ட திருத்தங்கல் போலீசார் அபிதுல் இஸ்லாம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து திருத்தங்கல் விஏஓ செல்லச்சாமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News