பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல்

பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-12-02 11:59 GMT

கொலை மிரட்டல் விடுத்தவர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் ஜீவா நகரை சேர்ந்தவர் குணசேகரன் வயது 53 இவர் செய்யாறு- காஞ்சிபுரம் சாலையில் உள்ள பெட்ரோல் வங்கி மேலாளராக உள்ளார். இந்த பங்கில் அஜித் குமார் மற்றும் ராஜேஷ் பாபு என்பவர்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியம்மன் நகரை சேர்ந்த சுனில் வயது (18), ராஜேஷ் (20) என்பவர்கள் பெட்ரோல் பங்கிற்கு அடிக்கடி சென்று பணம் தராமல் பெட்ரோலை அடிக்கடி நிரம்பி உள்ளனர். இதேபோல் நேற்றும் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்ப பங்கிற்கு வந்தனர்.

அப்போது அஜித்குமாரும், ராஜேஷ் பாபுவும் பணம் தந்தால் தான் பெட்ரோல் போட முடியும் என்று கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த சுனில் மற்றும் ராஜேஷ் ஊழியர்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் குணசேகரன் செய்யாறு போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுனிலை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News