மேட்டூர் அணையில் நீர்வரத்து சரிவு

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 693 கன அடியாக குறைந்தது.

Update: 2023-12-30 04:51 GMT

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 693 கன அடியாக குறைந்தது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 693 கனஅடியாக குறைந்தது. காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து வருகிறது. நீர்வரத்து நேற்று வினாடிக்கு 901 கன அடியில் இருந்த நிலையில் இன்று 693 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.18 அடியில் இருந்து 71.21 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 33.74 டிஎம்சியாக உள்ளது.குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News