மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

Update: 2023-11-24 04:42 GMT

மேட்டூர் அணை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.மேட்டூர் அணைக்கு நேற்று 4107 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3829 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 250கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று63.45 அடியாக இருந்த நீர்மட்டம், இன்றுகாலை 63.83 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 27.62 டிஎம்சியாக உள்ளது.
Tags:    

Similar News