வரத்து சரிவு பீன்ஸ் விலை உயர்வு
தர்மபுரி உழவர் சந்தையில் வரத்து சரிவால் பீன்ஸ் விலை அதிகரித்துள்ளது.
Update: 2024-05-04 04:28 GMT
தர்மபுரி மாவட்டத்தில் 6 இடங்களில், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை சார்பில், உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இதில் தர்மபுரி உழவர் சந்தையில் 115 கடைகளில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தினமும் அதிகபட்சமாக 32 டன் வரை காய்கறிகள் விற்பனையாகிறது. கோடை எதிரொலியாக காய்கறி கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், பீன்ஸ் கிலோ 80க்கு விற்பனையானது. வரத்து குறைந்ததால் பீன்ஸ் விலை படிப்படியாக அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிலோ பீன்ஸ் 140க்கு விற்பனையானது. இதே போல், பச்சை மிளகாய் வரத்து 700 கிலோவில் இருந்தது இன்று 465 கிலோவாக குறைந்தது. வரத்து குறைவால் பெரும்பாலான காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.