மதுராந்தகத்தில் கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்துவதில் தாமதம்

மதுராந்தகத்தில் கழிவு நீர் கால்வாய் சுத்தப்படுத்துவதில் தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

Update: 2024-05-11 10:13 GMT

கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள்

மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், ஜி.எஸ்.டி., சாலையின் இரு மார்க்கத்திலும், வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர் கழிவுகளை, துாய்மை பணியாளர்கள் அவ்வப்போது அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதில், காலை நேரத்தில் கழிவுநீர் கால்வாயில் இருந்து அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளை, இரவு அல்லது மறுநாள், நகராட்சி குப்பை வண்டிகளில் எடுத்துச் செல்கின்றனர். தினந்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் ஜி.எஸ்.டி., சாலை பகுதியில், கழிவுநீர் கால்வாயில் இருந்து எடுக்கப்படும்

குப்பை கழிவுகளை, உடனே அகற்றாமல், பகல் முழுதும் அப்படியே கிடக்கின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. கழிவு நீர் கால்வாய் துாய்மைப்படுத்திய பின், உடனே பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்துவதில்லை. பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்திய பின், அப்பகுதியில் நோய் தோற்று ஏற்படாமல் இருக்க,

பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். எனவே, இது குறித்து நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News