மாடுலர் கிச்சன் அமைத்து தராமல் இழுத்தடிப்பு - இழப்பீடு வழங்க உத்தரவு

மாடுலர்கிச்சன் அமைத்து தராமல் இழுத்தடித்த நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கில் வாடிக்கையாளருக்கு ரூ.2.15 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2024-06-26 08:40 GMT

நீதிமன்றம் 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் சாதிக் அலி (60). கோவை சாய் பாபா காலனியில் உள்ள ஒரு நிறுவனத்தில் தனது வீட்டுக்கு மாடுலர் கிச்சன் அமைக்க ஆர்டர் கொடுத்துள்ளார். இதற்காக அந்த நிறுவனத்திற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தார். கடந்த 2022-ம் ஆண்டில் இதைப் பெற்றுக் கொண்ட அந்த நிறுவனத்தினர் பணியை முழுமையாக செய்து முடிக்காமல் இழுத்து அடித்துள்ளனர்.இது தொடர்பாக சாதிக் அலி, திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கோட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தீபா மற்றும் உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட நிறுவனம், சாதிக் அலிக்கு 2 லட்சம் ரூபாய் மற்றும் வழக்கு செலவுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News