சென்னையில் வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி
சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் குலுக்கல் முறையில் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்காக தெரிவுசெய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகள் (VVPAT) இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்,
சிந்தாதிரிப்பேட்டை ஜெயின் கோவில் பகுதியில் உள்ள வைப்பு அறையிலிருந்து, 16 சட்டமன்றத் தொகுதிகளின் வைப்பு அறைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன்,இன்று (26.03.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) சுரேஷ் மற்றும் அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.