ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
குமரி மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க சிஐடியு தோட்ட தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கோரிக்கை வைத்தார்.
சி.ஐ.டி.யு தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் வல்சகுமார் வெளியிட்டு உள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளான விளவங்கோடு, திருவட்டார், கல்குளம் மற்றும் தோவாளை தாலுகா பகு திகளில் மழை தொடர்கிறது. மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் ரப்பர் தோட்டம் உள்ளது. ரப்பர் உற்பத்தி சார்ந்து சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள்வரை பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் மழை காரணமாக வேலைகள் முடங்கி உள்ளன. வறுமையில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் தற்பொழுது குழந்தைக ளின் எதிர்காலம் குறித்து வேதனைப்படும் நிலை உருவாகி உள்ளது.பருவமழை காலம் ஜூன் மாத துவக்கத் தில் ஆரம்பமாகும். இதனால் கன்னியா குமரி மாவட்டத்தில் மழை பொழிவு தொடரும் நிலையே உள்ளது. எனவே, ஏழை தோட்ட தொழிலாளர்களுக்கு இயற்கை பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மீன்பிடி தொழிலாளர்களுக்கு வழங்கும் பஞ்ச காலநிவாரணம் வழங்க வேண்டும்.
சீரான வேலைகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைப்பது வரை நிவாரண தொகை அனு மதித்து வழங்க, கன்னியாகுமரி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு சார் பில் தமிழக அரசை வலியுறுத்தி வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.