மாடு அடைக்கும் பட்டி பராமரிக்க வேண்டுமென கோரிக்கை

சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே புதர்மண்டி உள்ள மாடு அடைக்கும் பட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2024-04-08 11:58 GMT

சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே புதர்மண்டி உள்ள மாடு அடைக்கும் பட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


செங்கல்பட்டு மாவட்டம்,சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே, அரசுக்கு சொந்தமான பழைய மாடு அடைக்கும் பட்டி உள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி வாயிலாக வயல்வெளி, சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில், கட்டுப்பாடு இன்றி சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து இந்த பட்டியில் அடைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. மாட்டின் உரிமையாளரிடம் அபராதம் வசூல் செய்த பின், அந்த மாடுகள் பட்டியில் இருந்து விடுவிக்கப்படும்.

இந்நிலையில், சில ஆண்டுகளாக மாடு அடைக்கும் பட்டி பராமரிப்பு இல்லாமல், மரம், செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டி பாழடைந்து உள்ளது. மேலும், மாடு ஆடைக்கும் பட்டி, தற்போது பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக மாறியுள்ளது. இங்கிருந்து, அவ்வப்போது அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விஷ ஜந்துக்கள் உலா வருவதால், குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புதர்மண்டி உள்ள மாடு அடைக்கும் பட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News