வெள்ளம் ஏற்படாமல் தடுக்க பாலத்தை உயர்த்தி கட்ட கோரிக்கை

Update: 2023-12-14 02:10 GMT
மழை வெள்ளம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

போரூர் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயில், மாதநகர் — பூமாதேவி நகர் இடையே உள்ள சிறுபாலம் மற்றும் தடுப்பு சுவர் உயரத்தை அதிகரித்தால் கெருகம்பாக்கத்தில் வெள்ள பாதிப்பை தடுக்கலாம் என குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். சென்னை அருகே போரூர் ஏரியின் உபரி நீர் குன்றத்துார் அருகே கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் வழியே செல்லும் கால்வாய் மூலம் அடையாறு கால்வாயை சென்றடைகிறது. இந்த கால்வாய் குறுக்கே கெருக்கம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பூமாதேவி நகர் - மாதா நகர் இடையே சிறு பாலம் உள்ளது.

Advertisement

ஆண்டுதோறும் வடக்கிழக்கு பருவமழையின் போது இந்த கால்வாயில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுகிறது. வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் நுழைவதை தடுக்க கால்வாயின் இருபுறமும் 2 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பு சுவர் போதுமான உயரம் இல்லை. மேலும், கால்வாய் குறுக்கே உள்ள சிறுபாலம் தாழ்வாக உள்ளதால் அந்த வழியே கால்வாயில் செல்லும் வெள்ள நீர் பூமாதேவி நகர், மாதா நகருக்குள் புகுவதால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பூமாதேவி நகர் மக்கள் கூறுகயில், மிக்ஜாம் புயல், வெள்ளத்தின் போது குடியிருப்பு பகுதியில் 3 அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கியது. இதனால், ஆறு நாட்களாக அவதிக்குள்ளாகினோம். கால்வாய் குறுக்கே உள்ள சிறு பாலத்தை உயர்த்தி கட்டி கால்வாயின் கரைகளை மேலும் உயர்த்தினால் கெருகம்பாக்கத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்கலாம். எனவே, சிறுபாலத்தை உயர்த்தி கட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News