இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நகரச் செயலாளர் முருகன் தலைமையில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை கண்டித்து நாடு தழுவிய முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் கண்டன உரையாற்றினார்.
மேலும் பாலஸ்தீனம் காசா மற்றும் ரவா அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 46 அப்பாவிகள் பலியாகி உள்ளனர். கடந்த எட்டு மாதங்களில் 36 ஆயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல் இன வரி அரசு பாலஸ்தீனம் மீதான தாக்குதலை உடனே நிறுத்தி போர் நிறுத்தம் செய்ய வேண்டும். சுயேட்சியான பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும். மோடி அரசு இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென உள்ளிட்ட பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட சிபிஎம் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.