மணப்பாறையில் வி.ஏ.ஓ.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பயிர் கணக்கெடுப்பு பணியை கண்டித்து மணப்பாறையில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-06 15:58 GMT

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழ் நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாலை டிஜிட்டல் கிராப் சர்வே கணக்கெடுப்பு பணியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட தலைவர் ப.பாண்டீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு டிஜிட்டல் கிராப் சர்வே பணியை துவங்க கொடுக்கப்படும் முறையற்ற அழுத்தத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். ஏற்கனவே வழக்கமான பணிகள் மற்றும் சிறப்பு திட்டப் பணிகள் போன்ற மிகுந்த பணிப்பளுவில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மீது, தமிழ்நாடு அரசின் சேவைகள் மற்றும் பணிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்களுக்கு தேவையான எவ்விதமான தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்காமல், மென்மேலும் இப்பணியை திணிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News