திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-03-04 12:11 GMT

தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரிப்பு, சட்ட ஒழுங்கு பிரச்சனை, விலைவாசி உயர்வு இதனை கண்டித்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார் தமிழகம் முழுவதிலும் போதை பொருள் அதிகரிப்பு சட்டம் ஒழுங்கு பிரச்சனை விலைவாசி உயர்வு என அனைத்தையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் விருதுநகர் தேச பந்து மைதானத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக, தள்ளாடுது தள்ளாடுது தமிழகமே போதையில் தள்ளாடுது ஸ்டாலின் அரசு இளைஞர் சமுதாயத்தை அழிக்காதே மாணவர் சமுதாயத்தை சீரழிக்காதே, பொய் பிரச்சாரத்தை தொடர்ந்து கூறாதே, விலைவாசி ஏறி போச்சு, எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நடுவே அதிமுக தொண்டர் ஒருவர் கிராம் போன் வைத்து தனியாக திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பியது அனைவரையும் கவர்ந்தது.

  பின்னர் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி இராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து போதையில் இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிலாளர்கள் வெடி விபத்தில் இறந்தால் மூன்று லட்சமா என முன்னாள் அமைச்சர் கே.டி . இராஜேந்திர பாலாஜி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார் மேலும் தமிழர்களுக்காக உழைக்கக் கூடிய கட்சி அதிமுக கட்சி தான் எனவும், ஸ்டாலின் அரசே உடனடியாக தமிழகம் முழுவதிலும் உள்ள போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டும், திமுக அரசுக்கு தக்க பாடம் புகற்றும் வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அரசுக்கு வாக்களித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்க வேண்டும் என பேசினார்.

Tags:    

Similar News