ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம்.
ஏஐடியுசி உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்.
By : King 24x7 Website
Update: 2023-12-12 03:29 GMT
பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியுசி உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயராமன் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் கூட்டாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில். நல வாரியத்தில் பதிவு செய்யும் வழிமுறைகளை எளிமைப்படுத்திட வேண்டும், தற்போது வாங்கி வரும் ஓய்வூதியத்தை மாதம் 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு வழங்கி வரும் உதவி தொகை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் பண பலன்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், மாதம் பத்தாம் தேதிக்குள் ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்களை பணிவரன் செய்திட வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட துணை செயலாளர் ராஜாங்கம், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, ஏஐடியுசி கட்டட தொழிற்சங்கம் மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், பொருளாளர் கந்தசாமி, மாவட்ட துணை செயலாளர் சங்கர், மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.