வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-28 02:25 GMT

விருதுநகர் மாவட்டம் முழுவதும் வருவாய் அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பக் கோரியும் பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடனடியாக வழங்க கோரியும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 16,000 வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர்  கால வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலக வாயிலில் விருதுநகர் மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கத் தலைவர் கோதண்டராமன் தலைமையிலும் செயலாளர் பொன்ராஜ் முன்னிலையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில்  கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரியும் கண்டன முழக்கங்களையும் கோசங்களையும் எழுப்பினர். இந்த போராட்டத்தில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தால் அரசு பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளன. மேலும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Tags:    

Similar News