ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-05 05:45 GMT

ஆர்ப்பாட்டம் 

அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப கோரியும் ,அவுட்சோர் சிங் நியமன நடைமுறையை கைவிட வேண்டும், கிராம ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, ஊதியம் ,மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு ,வரையறுக்கப்பட்ட அவுட்சோர் சிங் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட விடுபட்டு உள்ள அனைத்து உரிமைகளையும் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர் வசந்தன் தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Tags:    

Similar News