கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடியில் டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு கூடுதலாக ஆட்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-01-07 03:33 GMT
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் வாணியம்பாடி வட்டத் தலைவர் பார்த்திபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் டிஜிட்டல் கிராப் சர்வேக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளாகியும் அவர்களுக்கு பணி வரன்முறை செய்யாத வருவாய் நிர்வாக ஆணையத்தை கண்டித்தும், டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு கூடுதலாக ஆட்களை நியமனம் செய்ய வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.