நாடாளுமன்ற தாக்குதலை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Update: 2023-12-15 05:01 GMT

ஆர்ப்பாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வாலிபர்கள் வண்ண புகைக்குண்டுகளை வீசினர். இதை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னங்குறிச்சியில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு தலைமை தாங்கினார். இதில் நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித்ஷா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் வசந்தம் சரவணன், பொதுச்செயலாளர் எம்.ஆர்.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் தனசேகர், கதிரவன் மற்றும் நிர்வாகிகள் ஜெபி, கிருஷ்ணா, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News