இஸ்ரேல் அரசின் அடாவடி போரை நிறுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 

பாலஸ்தீன மக்களை பாதுகாக்கவும், இஸ்ரேல் அரசின் அடாவடி போரை நிறுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-03 01:45 GMT

ஆர்ப்பாட்டம் 

பாலஸ்தீன மக்கள் மீது இனப்படுகொலையை நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அதற்கு துணை போகும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளை கண்டித்தும், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட குழு முன்னெடுப்பில்,  இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை மாலை  நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் என்.சீனிவாசன், திமுக தஞ்சை மாநகரச் செயலாளரும், மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன்,  சிபிஐ (எம்.எல்) மாவட்டச் செயலாளர் கண்ணையன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் அகமது கபீர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம். ஜெயினுலாபுதீன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் வெ.சேவையா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோ. நீலமேகம், ஆர்.மனோகரன், சி.ஜெயபால், பி.செந்தில்குமார்,  என்.வி.கண்ணன்,  ஆர்.கலைச்செல்வி,  என்.சரவணன், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இரா.புண்ணியமூர்த்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலர் என்.குருசாமி,  சிபிஎம் தஞ்சை ஒன்றிய செயலாளர் கே.அபிமன்னன், தஞ்சை மாநகரச் செயலாளர் வடிவேலன், கும்பகோணம் நகர செயலாளர் செந்தில்,  மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாநகரக் குழு உறுப்பினர்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில், "இன அழிப்பு போரை தடுத்து நிறுத்த வேண்டும். பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள், பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். உணவு குடிநீர் மருந்து தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும்" என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News