சிவகங்கையில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஆர்ப்பாட்டம்
கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு உரிமைத்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்;
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை தமிழ்நாடு அரசு உடனே வழங்கிட வேண்டும், கடும் ஊனமுற்ற மாற்று திறனாளிகளுக்கு அரசு இலவசமாக வழங்கிய பெட்ரோல் ஸ்கூட்டரில் இணைப்பு சக்கரத்தை நான்கு சக்கர வாகனம் என காரணம் காட்டி உரிமைத்தொகை வழங்க மறுப்பதை கைவிட்டு,
மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும் உரிமை தொகை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநில செயலாளர் ஜீவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்